அப்ரிடியுடன் உறவு வைத்த மொடல் அழகிக்கு மதவாதிகள் பாத்வா

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியுடன் உறவு கொண்டதாக கூறிய மொடல் அழகி அர்ஷி கானுக்கு மதவாதிகள் பாத்வா (தீர்ப்பு) விதித்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை அர்ஷி கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “பாகிஸ்தான் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. பாத்வா அளித்ததற்கு யாரும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. பாகிஸ்தான் விழுத்தெழ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் பாத்வாக்கு பதில் குறித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில், “நான் அப்டிரியுடன் உறவு கொண்டேன், நிர்வாண போஸ் கொடுத்தேன் என்று தெரிவித்த டுவிட்களுக்காக தான் பாகிஸ்தான் மதவாதிகள் பாத்வா விதித்துள்ளனர்.

ஆனால் இது எனது வேலை. அப்ரிடி எனது காதலன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடக் கூடாது. இதை நான் முன்பே கூறி இருக்கிறேன்.

மேலும், நான் யாரையும் கண்டு பயப்படவில்லை. என்னை கொலை செய்ய வேண்டும் என்றாலும் என் மீது மை ஊற்ற வேண்டும் என்றாலும் அதை நான் வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செப்ரெம்பர் மாதம் பிரபல மாடல் அழகி அர்ஷி கான், “ஆமாம், நான் அப்ரிடியுடன் உறவு வைத்துக் கொண்டேன்.

ஒருவருடன் படுத்து உறங்க நான் இந்திய ஊடகங்களின் அனுமதி பெற வேண்டுமோ? இது என் தனிப்பட்ட விடயம். என்னைப் பொறுத்தவரை இது காதல்” என்று தெரிவித்திருந்தார்.