அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்…

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று(30) உத்தரவிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.