அண்மையில் கண்டி – திகன வன்முறையில் சதித்திட்டம் தீட்டியமை குறித்து கைதாகி அனுராதபுர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹ சொஹோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை கடந்த (26)ம் திகதி அனுராதபுர சிறைச்சாலை வைத்தியசாலையின், மருந்தகத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படும் மருந்தக மருந்தாளர் நேற்று(30) அனுராதபுர தலைமையக பொலிசில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரசிங்கவின் மனைவியால் அனுராதபுர தலைமையக பொலிசில் கடந்த தினம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்தே குறித்த சம்பவத்தினை உறுதி செய்ததன் பிற்பாடு பொலிசார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.