அமீரலியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை! முகா வின் வங்குரோத்து உச்சக்கட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் அ.இ.ம.கா வின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலியின் நெருங்கிய ஆதரவாளர் அமீன் என அழைக்கப்படும் 32 வயதுடைய இளைஞரே இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த படுகொலை குறித்து கேள்வியுற்ற அ.இ.ம.கா தேசியத் தலைவர் றிசாத் பதியுதீன் பெரும் அதிர்ச்சியும் கவலையையும் அடைந்துள்ளதுடன் தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

கல்குடா தொகுதி மக்கள் ஒன்று பட்டு தமக்கு என ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கும் இன்றைய சூழ்நிலையை அதை குழப்பி அடிக்கும் நோக்கில் முகா தலைவர் ஹக்கீம் பல்வேறு சதி நடைவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு அங்கமாகத்தான் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒருவரை நியமித்து கல்குடா தொகுதி பிரதிநித்துவத்தை இல்லாதொழித்து, வாக்குகளை சிதறடித்து, கல்குடா தொகுதி மக்களை இல்லாதொழிக்கும் செயற்திட்டமாகும்.