‘அமீர்கான் உடன் நடிக்க ஆசைப்படுகிறேன்…’ – மானுஷி பேட்டி…

2017 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவி மானுஷி சில்லர்.

இவரது பெற்றோரும் மருத்துவர்கள் தான். இவர் மருத்துவ மாணவியாக இருந்தாலும் இவருக்கு இந்த போட்டியில் ஆர்வம் அதிகம். அதற்காக அவர் பெரிய அளவில் இந்தியாவிற்கு வெற்றியினை ஈட்டிக்கொடுத்தவர் என்றால் மிகையாகாது.

இவர் அந்த விழாவை முடித்துவிட்டு இந்தியா திரும்பியபோது அவரை சந்தித்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது;

“..தனக்கு பாலிவூட்டில் நடிக்க ஆசை உள்ளது. குறிப்பாக, அமீர்கான் உடன் நடிக்க ஆசைப்படுகிறேன். அமீர்கானின் படங்கள் தான் சவால்கள் நிறைந்ததாகவும், சமூக கருத்துக்கள் உள்ளதாகவும் இருக்கும். ஆகவே அவருடன் நடிக்க விரும்புகிறேன். மேலும் பிரியங்கா சோப்ரா தான் மிகவும் பிடித்த நடிகை..”

 

####