அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்வது சுலபம்…

அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் தன்னால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில், இரத்து செய்துகொள்ள முடியுமென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (25) தெரிவித்தார்.

டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்த, பொலிஸ் நிதிப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்காக, வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொடுக்கச் சென்ற கோட்டாபய, சுமார் 3 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்த பின்னர், சற்று முன்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறிய அவரிடம், அமெரிக்கப் பிரஜாவுரிமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.