உலகம் முழுவதிலும் பயணம் செய்யும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் உலக அளவில் காணப்படுவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்இ அல் கய்தாஇ போகோ ஹாராம் உள்ளிட்ட ஏனைய பயங்கரவாத அமைப்பினரால் இவ்வாறு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
பல்வேறு வழிகளில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் பயிற்சி பெற்று திரும்பியவர்களிடம் இவ்வாறான அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பிரஜைகள் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பிரகைகள் தங்களது பயண விபரங்களை ராஜாங்கத்திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டியது அவசியமானது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.