அமெரிக்காவினால் சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் இலங்கையில் கைது…

அமெரிக்காவினால் சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இலங்கையிலிருந்து வெளியேற முயற்சித்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணினி குற்றச்செயலுடன் தொடர்புடைய லெபனான் நாட்டைச் சேர்ந்த அஹமட் பாகிஹ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாராச்சி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு கடன் அட்டையை பயன்படுத்தி குறித்த நபர் செய்துள்ள குற்றச் செயல் ஒன்றின் காரணமாக கிழக்கு நியுயோர்க் நீதிமன்றம் குறித்த நபரை கைது செய்யுமாறு சிவப்புப் பிடியாணை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.