அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(FASTNEWS | COLOMBO) – அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று 6.4 என்ற அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மொஜாவே பாலைவனத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கமானது தெற்கு கலிபோர்னியாவின் பெரும்பான்மனையான பகுதிகளை தாக்கியுள்ளது. அண்டை நாடான நெவாடாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

குறித்த மாகாணத்தில் 20 வருடங்களுக்கு பின்னரே குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.