அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஊரடங்கு உத்தரவு..

“ஹார்வி” என்ற சூறாவளியால் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நகரில் பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் திருடு போவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அவசியம் என்று நகர மேயர் சில்விஸ்டர் டர்னர் கூறியுள்ளார்

காலவரையற்ற இந்த உத்தரவு, உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 முதல் காலை முதல் 10 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் இந்த நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக  அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 13,000க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.