அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று(20) பதவி ஏற்பு…

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று(20) பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவுக்காக ஏற்பாடுகள் மும்மூரமாக நடந்து வருகிறது. மேலும், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அவர் பதவி ஏற்கும்போது இரண்டு பைபிள்களை பயன்படுத்துகிறார். ஒன்று, முன்னாள் அதிபராக ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்தியது. மற்றொன்று, டிரம்ப் தனது குழந்தைப்பருவத்தில் பயன்படுத்தியது. அவர் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிற விழா, ‘மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம்’ என்ற பொருளில் கொண்டாடப்படுகிறது.

கடந்த நவம்பர் 8-ம் திகதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.