அமெரிக்காவில் தலைமறைவான இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அமெரிக்கா சென்றிருந்த இலங்கையர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கைக்கு கரையோர பாதுகாப்பு கப்பல் ஒன்றை நன்கொடையாக அமெரிக்கா வழங்கியுள்ளது.

குறித்த கப்பலை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றவர்களில் 9 பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

அமெரிக்கா வழங்கும் கப்பல் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.