மெக்சிகோ – அமெரிக்க எல்லைச் சுவரை நிர்மாணிப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக அமெரிக்காவில் தேசிய அவசரநிலைமையைப் பிரகடனப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை இதனை அறிவித்துள்ளது.
டிரம்ப் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்து, எல்லைப் பாதுகாப்பு மசோதாவில் கையெழுத்திடுவார் என்றும், இதன் மூலமாக இராணுவ நிதிகளின் உதவியுடன் மெக்ஸிகோ எல்லை சுவர் கட்டப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.