அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையின் குறுக்கே பொதுமக்கள் நடந்துசெல்வதற்காக ஒரு சிறிய பாலம் அமைக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் நடைபெற்று வந்தநிலையில், நேற்று 950 டன் எடையுள்ள குறித்த மேம்பாலம் நேற்று(15) இடிந்து விழுந்துள்ளது

இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த எட்டு வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிசார், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.