அமெரிக்காவில் வெடிகுண்டு வைக்க சதி செய்ததாக கூறி பாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட அணித்தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த அபித் நசீர் என்பவரை கடந்த 2009- ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் பிரித்தானியா பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர் பாகிஸ்தானில் பள்ளி மற்றும் இளையோருக்கான துடுப்பாட்ட அணிகளில் அணித்தலைவராக பலமுறை இருந்துள்ளார்.
மான்செஸ்டர் நகரில் வணிக வளாகம் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக பின்னர் நடைபெற்ற விசாரணையில் தெரிய வந்தது.
அதனையடுத்து 2013 ஆம் ஆண்டு அபித் நசீர் பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டர்.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பிரித்தானியா வணிக வளாகத்தில் வெடிகுண்டு வைக்க அல்கொய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதில், இவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க பொலிசார் இவரை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்கா கடத்தப்பட்ட அபித் மீது புரூக்ளின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நடைபெற்ற விசாரணையின் முடிவில்,
இவரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்த அமெரிக்க நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.