அமெரிக்காவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

கனடா நாட்டின் வடமேற்கில் உள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 7 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் சில மணி நேரத்துக்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.