அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் இராஜினாமா

(FASTNEWS|COLOMBO) – டொனால்ட் டிரம்ப்பை பற்றி கடுமையாக விமர்சித்த இரகசியம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் கிம் டர்ரோச் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் பற்றிய பிரிட்டன் தூதரின் பகிரங்க விமர்சனத்தால் இருநாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் கிம் டர்ரோச் இன்று பதவியை இராஜினாமா செய்துள்ளார்.