அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரான ஜாலிய விக்ரமசூரியவை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராக கடமையாற்றிய காலத்தில், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி, நிதிகுற்றப் புலனாய்வு பிரிவு, இவரை கடந்த மாதம் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.