வடக்கு அட்லாண்டிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள ‘இர்மா’ புயலால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கரீபியன் நாடுகளான ஹைதி, கியூபா, டொமிகன் குடியரசு, புயிட்ரோ ரிகோ ஆகிய நாடுகளை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் கடலில் மாபெரும் அலைகள் உண்டாகலாம் என்றும் புல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புளோரிடா மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்புப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை சமீபத்தில் ஏற்பட்ட ஹார்வே புயல் காரணமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..