(FASTNEWS|COLOMBO) அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் 02 சிறுவர்கள் உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டெக்சாஸ், அலபாமா, மிச்சிபிசி ஆகிய மாகாணங்களை மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி தாக்கியுள்ளது.
சூறாவளி காரணமாக பல பகுதிகளில் சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சூறாவளி காற்றில் சிக்கி மின்கம்பங்கள் சரிந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 3 மாகாணங்களிலும் சுமார் 1 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.
இதற்கிடையில் மிச்சிபிசி மாகாண கவர்னர் பில் பிரயாந்த் அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.