அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்திலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் இன்று(11) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் மற்றுமிரு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாடசாலை ஆசிரியையொருவரின் கணவனினால் குறித்த ஆசிரியை இருந்த வகுப்பறைக்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் போது மாணவர்கள் ஆசிரியையைச் சூழவும் இருந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக சர்வதேச செய்தி வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.