அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கடற்கரை நகரமான பெர்க்லியில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:39 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலநடுக்கத்தால் தூக்கத்தில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.