அமெரிக்கா செல்லும் விமானங்களுக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகள் நேற்று அமுல்…

அமெரிக்கா செல்லும் விமானங்களுக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகள் நேற்று(26) அமுலுக்கு வந்துள்ளது. வெடிபொருட்களை மறைத்து எடுத்துச் செல்லும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தவே இந் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பயணிகளின் சோதனைகள் கடுமையாக்கப்படுவதுடன் விமானத்திற்குள் அனுமதிக்கப்படும் மடிக்கணனிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும் அடங்குகின்றது.

நாளொன்றுக்கு 100க்கும் அதிகமான நாடுகளிலிருந்து வரும் சுமார் 2,000 விமானங்கள் இந்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சோதனைகள் விமானப் போக்குவரத்தில் தாமதத்தை ஏற்படுத்தும் என்றும் கட்டண உயர்வுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சில விமானசேவை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், அமெரிக்கா வரும் அனைத்து வர்த்தக விமானங்களும் இதில் அடங்குவதாக உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.