அமெரிக்கா செல்வதற்கான எச்-1பி விசா விண்ணப்பம் விநியோகம்…

அமெரிக்கா செல்வதற்கான எச்-1பி விசா விண்ணப்ப மனு எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் வழங்கப்படவுலதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்-1பி விசா என்பது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டினருக்குரியது. இதை வைத்து அங்கு நிரந்தரமாக குடியேற முடியாது. பணிக்காலம் முடிந்ததும் அங்கிருந்து அவர்கள் வெளியேற வேண்டும்.

இந்த விசாவை பயன்படுத்தி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான ஐ.டி. ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளன.

இந்நிலையில், அமெரிக்கா செல்வதற்கான எச்-1பி விசா விண்ணப்ப மனு ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. அதேநேரத்தில் அனைத்து எச்-1 பி விசாவுக்கான பிரீமியம் விண்ணப்பம் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். மேலும் 2019-ம் ஆண்டுக்கான எச்-1 பி விசா மனு தாக்கல் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது