அண்மைக் காலமாக அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் நேற்று(16) ரூபாவின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு ஈடாக 1.33 ரூபாவினால் அதிகரித்து உள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் நேற்று(16) வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதத்துக்கு அமைவாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 167.73 ரூபாவாக இருந்ததுடன் விற்பனை விலை 171.60 ஆகும்.