அமெரிக்கா மஹிந்தவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிறது..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தின் ஊடாக இந்த கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.