(FASTNEWS | COLOMBO) – அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இம்மாத இறுதி வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று(10) நடந்த ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்காக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயணத் திட்டம் குறித்த அறிவிப்பை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்கன் ஒடாகஸ் வெளியிட்டார்.