அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உயர் அதிகாரி இலங்ககைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் அனைத்துலக தகவல் திட்டப் பிரிவின் இணைப்பாளரான மகொன் பிலிப்ஸ் என்ற அதிகாரியே இவ்வாறு குறுகிய காலப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை அல்லது நாளை மறுநாள் அதிகாலையில் கொழும்பு வந்து சேருவார் என்று எதிர்பார்க்கப்படும் இவர், அரசாங்க உயர்மட்டத்துடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் அமெரிக்காவின் அண்மைய நிகழ்ச்சி நிரலுக்கமைய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் கொழும்புக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.