(FASTNEWS|COLOMBO)- தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் எலிஸ் வேல்ஸ் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த 6 ஆம் திகதியிலிருந்து 16 ஆம் திகதி வரை பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவர் தனது விஜயத்தின் போது, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.