அமெரிக்க-கனடா எல்லை சோதனைச் சாவடியில் ஏற்பட்ட வாகன வெடிப்பில் இருவர் உயிரிழப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலம், ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் நான்கு எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும். லூயிஸ்டன், வேர்ல்பூல் மற்றும் பீஸ் பிரிட்ஜ் ஏனைய எல்லைக் கடப்புகளாகும்.

இந்நிலையில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்க – கனடா எல்லை சோதனைச் சாவடியில் வாகனம் வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலத்தின் எல்லையில் ஒரு வாகனம் வெடித்த சம்பவம் ‘பயங்கரவாத தாக்குதல்’ முயற்சியாக இருக்கலாம் என சந்தேகித்து FBI விசாரனையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.