அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்ய கோத்தாபய அமெரிக்கா பயணம்..

(FASTGOSSIP | COLOMBO) – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தயாராகி வரும் கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாக கூறியிருந்தார்.

எனினும், அவர் இன்னமும் அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருக்கின்ற நிலையில், இம்மாத பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.