அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்கள் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்கள் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.