அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை பதவி நீக்கம் செய்த டிரம்ப் மனைவி

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்த தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை வெள்ளை மாளிகை பதவி நீக்கம் செய்துள்ளதக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் கடந்த மாதம் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது மெலனியாவின் உதவியாளர்களுக்கும் மிரா ரிக்கார்டெலுக்கும் இடையில் சச்சரவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ‘இந்த வெள்ளை மாளிகையில் தொடர்ந்து பணியாற்றும் கௌரவத்தை மிரா ரெக்கார்டல் இழந்து விட்டார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மிரா ரெக்கார்டல் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அதிபரின் வெள்ளை மாளிகை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறன.