அமெரிக்க படைகளை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிக்கவுள்ளதாக ஈரான் தெரிவிப்பு…

ஈரான் இராணுவத்தை தீவிரவாதப்படை என அறிவித்த அமெரிக்காவுக்கு பதில் கொடுக்கும் வகையில் அமெரிக்க படைகளை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிக்கவுள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தை மீறிய வகையில் அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் பரிசோதித்து வரும் ஈரான் நாட்டு இராணுவத்தை தீவிரவாதிகள் என சமீபத்தில் அமெரிக்கா அறிவித்தது. மேலும், ஈரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் “எங்கள் மீது புதிய தடைகள் விதிக்கப்பட்டால், எங்கள் நாட்டு இராணுவத்தை தீவிரவாதிகள் என அமெரிக்கா கருதினால், எங்கள் படைகளும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இணையாக அமெரிக்க இராணுவத்தை கருத தொடங்கும் என அந்நாட்டின் இராணுவ தளபதி முஹம்மது அலில் ஜாப்ரி கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.