அமெரிக்க பதில் தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு..

இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் திரு.ரொபட் ஹில்டன் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்னவை சந்தித்துள்ளார்.

அமைச்சில் நேற்று(11) இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருவருக்குமிடையில் இருதரப்பு விடயங்கள் தொடர்பாக சுமூக கலந்துரையாடல் இடம் பெற்றது.

மேலும், திரு.ரொபட் ஹில்டன் இலங்கைக்கான அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்ட அமெரிக்க தூதாரக விவகாரங்கள் தொடர்பாகவும் செயற்படவுள்ளார்.

 
(rizmira)