அமெரிக்க பாப் பாடகரை கரம்பிடித்தார் பிரியங்கா சோப்ரா… (photos)

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவரது காதலரான பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் மும்பையில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலிக்கின்றனர். இவர்கள் காதலை இரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டனர்.

சமீபத்தில் நிக் ஜோனஸை மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தினரிடம் பிரியங்கா சோப்ரா அறிமுகம் செய்து வைத்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் காதலர்கள் இருவருக்கும் இந்திய முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

பே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டும் நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார்.
கடந்த வருடம் போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related image

Image result for priyanka chopra nick jonas engaged

Image result for priyanka chopra nick jonas engaged

 

Image result for priyanka chopra nick jonas engaged

Related image

Image result for priyanka chopra nick jonas engaged