அமேசன் மீண்டும் எரிகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் |  அமேசானியா) – அதிக உயிரினங்கள், விலங்குகள், கோடிக்கணக்கான மரங்களை கொண்டு இருக்கும் உலகின் மிகப்பெரிய காடான அமேசான் காடு தற்போது மீண்டும் தீ பிடித்து எரிவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீரென காரணமே இன்றி தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்த வருடம் மட்டும் அங்கு மொத்தமாக 93,000 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அமேசான் காட்டில் காட்டுத் தீ புதிதாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த முறை ஏற்பட்ட காட்டுத்தீக்கு பின் கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழ்ச்சி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால் இந்த முறை வெறும் 10 நாட்களில் காட்டு தீ மிக வேகமாக உருவெடுத்து பரவி வருகிறது. மொத்தம் 10,136 இடங்களில் இந்த முறை காட்டு தீ ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கிய இந்த காட்டு தீ மிக வேகமாக பரவி வருகிறது. சென்ற வருடத்தை விட 17% அதிகமாக இந்த முறை அங்கு காட்டு தீ ஏற்பட்டுள்ளது. மொத்தம் காட்டு பகுதியில் மட்டும் 81% கூடுதலாக தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களில் இதுதான் மிக மோசமானது என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.