நேற்றைய(03) அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று அமைச்சர்கள் இடையே கடும் வாதம் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது, மாகாண சபையின் எல்லை நிர்ணய குழுவில் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடல் நிலையே இவ்வாறு சூடாகியமையே என தெரிய வருகின்றது.
குறித்த வாதம் பைசர் முஸ்தபா, ரவூப் ஹகீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகிய அமைச்சர்களிடையே இடம்பெற்றுள்ளது.
குறித்த குழுவின் முஸ்லிம் பிரதிநிதிகள் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹகீம், அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
அதன்போது, ரிஷாத் பதியுதீன் அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சருக்கு ஆதரவு அளிக்க அங்கு நிலைமை சூடாகியதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வாதத்தினை சுமுக நிலைக்கு கொண்டுவர ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.
(rizmira)