கணக்காய்வுச் சட்ட மூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணக்காய்வு நடவடிக்கைகளை புதிய சட்டத்தின் மூலம் முன்னெடுப்பதற்கு இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக சுயாதீனமாக கணக்காய்வாளரின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் உறுதிமொழிகளில் இதுவும் ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.