அமைச்சரவை அமைச்சர்கள் கருத்துச் சுதந்திரத்தை நிதானமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்கள் கருத்து வெளியிடும் போது கருத்துச் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தி நிதானமாக கருத்து வெளியிட வேண்டும்.
அமைச்சர்கள் நிதானமாக கருத்து வெளியிட்டால் மட்டுமே தொடர்ந்தும் சுமூக நிலைமையை பேண முடியும்.
இன்னும், தற்போது நாட்டில் நிலவி வரும் சுதந்திரமான சூழ்நிலையை பயன்படுத்தி அமைச்சரவை அமைச்சர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
நான் இருபது தடவைகள் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் அமைச்சுப் பதவி வகித்திருக்கின்றேன்.
அந்த அரசாங்கங்களின் கீழ் பதவி வகித்த அமைச்சர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் கருத்து வெளியிட்டார்கள் என்பது பற்றி நான் நன்கு அறிவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பிரதமரும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.