(FASTNEWS | COLOMBO) – அமைச்சரவை அமைச்சுக் குழுவானது எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறுவதாக அமைச்சரவை அமைச்சர் மனோ கணேஷன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவுக்கு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை சாட்சியம் அளிக்க அழைக்க வேண்டாம் என்ற ஜனாதிபதியின் கருத்தில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இரு தரப்பினரிடையே இடம்பெற்ற சர்ச்சை நிலைமை காரணமாக கடந்த 11ம் திகதி இடம்பெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next meeting of Cabinet of Ministers will be held on 18th Tuesday. #lka
— Mano Ganesan (@ManoGanesan) June 13, 2019