அமைச்சரவை மறுசீரமைப்பு – புதிய அமைச்சுப் பதவிகள் இதோ.. (update)

நல்லாட்சி அரசின் மூன்றாவது புதிய அமைச்சரவை நியமனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகின்றன.

அமைச்சரவைக் குழு

  1. பொது நிறுவன மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் – லக்ஷ்மன் கிரியெல்ல 
  2. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்துறை பயிற்சி, மற்றும் மலை நாடு பாரம்பரியம் அமைச்சர் – சரத் அமுனுகம 
  3. உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வயம்ப அபிவிருத்தி அமைச்சர் – எஸ்.பீ.நாவின்ன 
  4. விவசாயத் துறை அமைச்சர் – மஹிந்த அமரவீர 
  5. நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் – துமிந்த திசாநாயக்க 
  6. சமூக அதிகாரசபையின் அமைச்சர் – பீ.ஹரிசன்
  7. நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் – கபீர் ஹஷீம்
  8. பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர், சட்டம் மற்றும் ஒழுங்கு – ரஞ்சித் மத்துமபண்டார
  9. நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் – தலதா அத்துகோரல
  10. விளையாட்டு அமைச்சர், மாகாண சபை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் – பைசர் முஸ்தபா
  11. கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பொருளாதாரம் அமைச்சர் – விஜித விஜயமுனி சொய்சா
  12. புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் – டி.எம்.சுவாமிநாதன்
  13. திட்ட மேலாண்மை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் – சாகல ரத்நாயக
  14. தேசிய கூட்டுறவு, சமரசம் மற்றும் உத்தியோகபூர்வ மொழிகள் – மனோ கணேஷன்
  15. சமூக நலம் மற்றும் முதன்மை தொழிற்துறை அமைச்சர் – தயா கமகே
  16. வனசீவராசிகள் அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி – சரத் பொன்சேகா
  17. தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் – ரவீந்திர சமரவீர
  18. உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் – விஜயதாச ராஜபக்ஷ

 

Rishma