அமைச்சரவை மாற்றம் இன்று (25) காலை இடம்பெறவுள்ளது. இதன்படி புதிய அமைச்சரவை இன்று காலை 11.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இன்று(25) அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலர் வெளிநாடு பயணிக்க தீர்மானித்துள்ளனர். அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று(25) அதிகாலை 3.00க்கு Q.R. – 669 எனும் விமானத்தினூடாக தோஹா, கட்டார் நோக்கிச் சென்றுள்ளார்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று(25) பகல் 1.55 மணியளவில் U.L.- 195 எனும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தினூடாக இந்தியா, புதுடில்லி நோக்கி பயணமாகவுள்ளார்.
அமைச்சர் சரத் அமுனுகம இன்று(25) பகல் 2.35 மணிக்கு U.L. – 406 ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தினூடாக தாய்லாந்து, பெங்கொக் நோக்கி பயணமாகியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர இன்று(25) பகல் 12.50 மணியளவில் U.L.- 503 ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தினூடாக லண்டன் பயணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#rishma