அமைச்சர் எஸ்.பீ’க்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்கவுக்கு எதிராக இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த முறைப்பாட்டினை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தினர் முன்வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் 14159 சேவையாளர்களின் ஊக்குவிக்குப்பானது ஒழுங்கான முறையில் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் திவிநெகும சட்டமூலத்தின் ஊடாக சமுர்த்தி அதிகார சபை உள்ளிட்ட 5 நிறுவனங்கள் நீக்கப்பட்டு திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சங்கத்தின் செயலாளர் சாமர முத்தம களுகே கூறியுள்ளார்.

மேலும் குறித்த நிறுவனங்களுக்கு சேவையாளர்களை இணைத்துக்கொள்ளும் போது ஊக்குவிப்புப் பணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட போதும் அது இதுவரையும் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக அமைச்சர் எஸ்பீ.திசாநாயக்கவை பிரதிவாதியாக குறிப்பிட்டு முறைப்பாடு ஒன்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாளைய தினம் சமர்ப்பிதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.