அமைச்சர் கிரியெல்ல ஊடகவியலாளர் ஒருவரை இழிவாய் திட்டியமை கேவலமான நடத்தையாகும் (VIDEO)

‘அத’ பத்திரிகையின் ஊடகவியலாளரான அமீத் மதுரங்கவை உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அசௌகரியமானதும் இழிவுபடுத்தும் வகையிலும் திட்டியமை குறித்து இலங்கையின் இளம் பத்திரிகையாளர் அமைப்பு தமது எதிர்ப்பை உயர் கல்வி அமைச்சரிடம் அறிக்கையாய் சமர்பித்துள்ளனர்.

மேலும், குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“அமைச்சர், ஊடகவியலாளர் அமீத் மதுரங்கவிற்கு முகத்தில் அடித்தாற்போல் அச்சுறுத்தும் தொனியில் திட்டியுள்ளார். தமுசே, ஐசே (තමුසේ, අයිසේ ) போன்ற சொற்கள் மாத்திரமின்றி பிரபல ஊடகங்கள் முன்னிலையில் கூறத் தகுதியற்ற சொற்களையும் பாவித்துள்ளார்.

ஒரு தலைப்பட்சயமாய் இருக்காது பொதுவான அறிக்கையிடல் நோக்கிலேயே அமைச்சரிடம் உண்மைகளை வினவியபோது அவர் நடந்துகொண்ட விடயமானது முழு ஊடகவியலாளர்களுக்கும் விடுவிக்கப்பட்ட கடுமையான அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

பாராளுமன்ற அவைத்தலைவரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவே இவ்வாறு கீழ்த்தரமாய் நடந்துகொள்வது குறித்து செய்தி ஊடகவியலாளர் அமைப்பு என்ற முறையில் தமது வெறுப்பையும், கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நல்லாட்சி மற்றும் ஊடக சுதந்திரம் பற்றி தற்போதைய அரசாங்கம் பேசுகையில், லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களது நடத்தை குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இலங்கையின் இளம் பத்திரிகையாளர் அமைப்பு என்ற ரீதியில் நாம் வலியுறுத்துகின்றோம்.

இணையத்தளத்தில் பிரசுரமான குறித்த audio தொகுப்பு வாசகர்களின் கவனத்திற்கு,

[youtube url=”https://www.youtube.com/watch?v=HqFJQsBTHho” width=”560″ height=”315″]