அமைச்சர் சம்பிக்க எனது கொரியா காதலியை கோர, முடியாது என்றேன் துன்புறுத்தினார்.. – சம்பிகவின் முன்னாள் PA சாட்சியம்..

அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க’வினது அரசியல் அழுத்தத்தினால் அங்கொட மனநல வைத்தியசாலையில் தடுத்து வைத்து தனக்கு மின்சார அதிர்ச்சி சிகிச்சை வழங்கியதாக அமைச்சரின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் ஹர்ஷ திலகசிறி பண்டார இனால் இலங்கை வைத்திய சபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டு விசாரணை நேற்று(10) கொழும்பு – 10 இல் அமைந்துள்ள இலங்கை வைத்திய சபையில் இடம்பெற்றது.

அதன் பிற்பாடு ஹர்ஷ திலகசிறி பண்டார ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

‘நான் ஹர்ஷ திலகசிறி. நான் சில காலம் பிரபல அமைச்சர் ஒருவரின் PA என்ற முறையில் சேவையாற்றினேன். நான் கொரியா நாட்டுப் பெண்ணுடன் காதல் வயப்பட்டு இருந்தேன். குறித்த அமைச்சர் எனது கொரியா பெண்ணினை கோரினார். நான் அவ்விடத்திலேயே அதனை முற்றாக மறுத்தேன், அது எனது காதலி விபச்சாரி அல்ல என கூறினேன். அவ்விடத்தில் இருவருக்கும் இடையிலும் முறுகல் நிலை தோன்றியது. குறித்த பிரச்சினையினால் அமைச்சர் என்னை இலஞ்சம் கொடுத்து வீட்டுக் காவலில் வைத்தார். குறித்த காவலில் அடைபட்ட நான் அங்கு நடந்தேறும் கொடுமைகளை பொறுக்க முடியாது அமைச்சரின் வீட்டுக் காவலில் இருந்து தப்பித்து எனது பிலியந்தலை வீட்டுக்கு சென்றேன்.

நான் வீட்டில் இருக்கவும் பயந்தேன். ஏனெனில், குறித்த அமைச்சரின் அடாவடிகளை நான் 20 வருட காலமாக நன்கு அறிந்தமையாலாகும். உண்மையில் அமைச்சரின் காபன் அச்சுப் போன்று அவரின் எல்லா சந்துபொந்துகளும் எனக்கு நன்கு தெரியும். ஆதலால் நான் கல்கிஸ்ஸையில் உள்ள எனது நண்பரின் வீட்டுக்கு வந்தேன். அங்கு இருக்கும் போது குருந்துவத்தை துணை பொலிஸ் அதிகாரி ஹேரத், அமைச்சரின் தனிப்பட்ட சாரதி பிரதீப் அல்விஸ், நகர்ப்புற அபிவிருத்தி செயல் பணிப்பாளர் சந்தன ரணசிங்க ஆகியோர் வந்து அமைச்சரின் வீட்டுக்கு என என்னை கடத்திச் சென்றனர்.

ஆனால், அவர்களை என்னை அழைத்துச் சென்றது அமைச்சரின் வீட்டுக்கு அல்ல அங்கொட மனநல வைத்தியசாலைக்கு… அங்கு வைத்தியர் ஜயான் மென்டிஸ் என்னவென்று விசாரிக்காது எனக்கு மின்னதிர் சிகிச்சை வழங்கினார். ஒரு மாதம் வைத்தியசாலையில் அடைத்து வைத்திருந்தனர். எனக்கு நிகழ்ந்த குறித்த அநீதிக்கு வைத்திய சபையில் பேராசிரியர் காலோ பொன்சேகா அவர்கள் இருக்கையில் அதாவது, நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் நான் முறைப்பாடு ஒன்றினை முனவைத்தேன். குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது நான் அதற்கு முகங் கொடுத்தேன். நான் நினைக்கின்றேன் சட்டத்தினால் வழங்க முடியாத நீதியொன்று எனக்கு வைத்திய சபையினால் கிடைக்கும் என நம்புகின்றேன். சட்டம் இன்னும் மௌனிக்கின்றது’

கேள்வி :

அமைச்சரின் பெயரினை கூற முடியுமா?

விடை :

ஆம், முடியும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. அவர் மிகவும் நல்லொழுக்கமுள்ளவராக வெளியில் தோற்றம் பெற்றாலும் பெரும் ஆபத்தான சரிதையாகும். அதனை நான் நன்கு அறிவேன். அவரது செயல்கள் நடவடிக்கைகள் குறித்து நான் நன்கு அறிந்ததால் தான் என்னை மனநல வைத்தியசாலையில் அடைத்து என்னை பைத்தியம் ஆக்க முயற்சித்தார்.

(rizmira)