புதிதாக திருமணமான இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரை இலங்கைக்கு வருமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், இலங்கையில் மிகவும் அழகான இடங்கள் இருப்பதாகவும், அதனை அவர்கள் பார்வையிட முடியும் எனவும், எமது விசேட விருந்தினராக அவர்களை அழைப்பதாகவும், அமைச்சர் தயாசிறி குறிப்பிட்டுள்ளாரென இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
#rizmira