அமைச்சர் துமிந்த ‘மவ்பிம’ இடமிருந்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோருகிறார்..

கமத்தொழில் அமைச்சரான துமிந்த திசாநாயக்க ‘மவ்பிம’ பத்திரிகைக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் கூறாத ஒன்றினை கூறியதாக குறித்த பத்திரிகையில் செய்தி வெளியாகியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த செய்தியானது பத்திரிகையில் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு இணையத்தளத்தில் வெளியான செய்தியில் மாறாக உள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)