(FASTNEWS | COLOMBO) – அரச கட்சியினை பிரதிபலிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீளவும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 11ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்திருந்தார்.
அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த அநேகமானோர் திரும்பவும் பதவிகளை பெறுவதில் விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் 03 மாதங்களுக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அநேகமானோர் அமைச்சுப் பதவிகளை பெறாது குறித்த காலப்பகுதியில் அரசுக்கு ஆதரவினை வழங்க எதிர்பார்த்து இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பௌசி தெரிவித்திருந்தார்.