வில்பத்து தேசிய வனப்பூங்காவுக்கு உரித்தான நிலப்பரப்பினை அழித்து கிராமம் ஒன்றினை உருவாக்க முன்னின்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அமைச்சர் பாலித ரங்கே பண்டார வனாத்தவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
அத்துடன், பூக்குளம் மீன்வள அமைப்பு நேற்று(28) அமைச்சருக்கு எதிராக மற்றும் பொதுமக்களுக்கு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்து முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளதாக வனாத்தவில்லு பொலிசார் தெரிவிக்கின்றனர்.
“..தான் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்து இருப்பது ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டால் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்றும் அவ்வாறு நிரூபிக்க தவறும் பட்சத்தில் ஆனந்த சாகர தேரர் அவரது காவியினை களைய வேண்டும்..” எனவும் அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#reeshmaa..